Wednesday, November 17, 2010

கலாட்டா காமெடி

எதிர் வீட்டுக்காரன்.........உங்கள் வீட்டில இன்று கத்தரிக்காய் குழம்பு போல

பக்கத்து வீட்டுக்காரன்........"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?
என் மனைவியின் சமையலோ மிகவும் பிரமாதம். அந்தக் கறி வாசனை
உங்களையும் இழுத்து விட்டதோ......?????"

எதிர் வீட்டுக்காரன்.........இல்லை. என் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஐந்து
கத்தரிக்காயைக் காணவில்லை.

பக்கத்து வீட்டுக்காரன்......?!?!?!?!?!?!?.

அவருக்கு பஞ்சு கம்பெனியில் ஏகப்பட்ட இலாபமாமே? என்னாச்சு?

பஞ்சாப் போச்சு

................................................................................
....................................

நகை வாங்கப் போனபோது அங்கிருந்த பொண்ணை உரசி நின்று தர்ம அடி வாங்கினியாமே. உண்மையா?

நீ தானே நகை வாங்கிறபோது பொன்னை உரசிப் பார்த்து வாங்க வேண்டும் என்று சொன்னியே அது தான் செய்தேன்.

"திருமணத்திற்குப் பின்னும் நடிப்பீர்களா.....??????"

"என் கணவர் சம்மதித்தால் நடிப்பேன்"

"சம்மதிக்காவிட்டால்..........."

"டைவர்ஸ் பண்ணிட்டு நடிப்பேன்."

tongue.gif
tongue.gif tongue.gif tongue.gif tongue.gif

................................................................................
.................................

"உங்க தொழில்ல ஏகப்பட்ட சிக்கல் இருக்குதே....."

"எப்படி கரெக்டா சொல்றீங்க.....????"

"நீங்கதானே இடியாப்ப வியாபாரம் பண்றீங்கன்னு சொன்னீங்க....."

laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif

''அங்கே அடிக்கடி போய் சாப்பிட்டு சாப்பிட்டு பழகிப் போனதால இப்ப வீட்டு சாப்பாட்டு டேஸ்டே பிடிக்காமப் போச்சு!

''அடிக்கடி ஹோட்டலுக்குப் போவீங்களா?''

''ஊஹூம், ஜெயிலுக்குப் போவேன்!''
................................................................................
.................................

''ராத்திரி பன்னிரண்டு மணிக்கு உன் மாமியாரை சுடு காட்டுல விட்டுட்டு வந்துட்டியாமே,

''ஏன்?''

''ஜலதோஷம்னு அவங்க தான் 'ஆவி' பிடிக்கணும்னாங்க''

................................................................................
.................................

''வெளிநாடு போய், தலையை அடகு வச்சாவது உங்க கடனை அடைத்து விடுவேன்.

''எந்த நாடு?''

''ஈராக்...''

................................................................................
..................................

''அந்த எழுத்தாளர் பத்துக்கும் மேற்பட்ட புனை பெயர்கள்ல கதை, கவிதை எழுதிட்டு வர்றாரு!''

''சரியான 'பேர்' ஆசைக்காரரா இருப்பார் போலிருக்கே!''

அந்தக் கம்பெனிக்கு வேலைக் கேட்டு போனான் அந்த இளைஞன். வேலை தருவதாகச் சொன்ன முதலாளி,
தினச் சம்பளம், மாதச் சம்பளம் இரண்டு விதமாக தருகிறோம். நீ எப்படி வாங்கிக் கொள்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு அவன், தினச் சம்பளத்தை தினமும் மாதச் சம்பளத்தை மாத மாதமும் வாங்கிக் கொள்கிறேன் என்றான்.
................................................................................
...................................

அந்த ஆசிரியர் மாணவனிடம் கேட்டார்,
போலீஸ் திருடனைப் பிடித்தது. இது செய்வினையா? செயப்பாட்டு வினையா?
அதற்கு அந்தக் குறும்பு மாணவன் சொன்னான்,
தீவினை சார்.
................................................................................
......................................

தன் கடி நண்பன் குமாரிடம், ரவி கேட்டான்,
அங்க இருக்கிற ஆண்கள் எல்லாம், பக்தி பிரசங்கத்திலே ஈடுபட்டிருக் காங்களே, ஏன்?
அதற்கு கடி நண்பன்,
அவர்கள் எல்லாம் ஆண் மீக வாதிகள் என்றான்.

No comments:

Post a Comment