Wednesday, November 17, 2010

தானாக வண்டி ஓடுகிறது

ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
_____________________________________

கனடாவில் கடுமையாக உழைத்த நம் சர்தார்ஜி சாந்தாசிங், கிடைத்த கொழுத்த பணத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கினார். கார் விற்பனை நிலையத்திலிருந்து " L " எச்சரிக்கை பலகையுடன் காரை பிரதான சாலைக்கு ஓட்டி வந்தார். காரை சாலையின் இரு ஓரங்களிலும் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓட்டியதால், போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டார்.

காவலர், "ஏன் காரை அங்குமிங்குமாக சாலையில் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்? என வினவினார்.

அதற்கு சர்தார் "நான் கார் ஓட்டி பழகுகிறேன்!" என்றார்.

உடனே காவலர், "நீங்கள், அதற்கு பயிற்சி ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டல்லவா பழக வேண்டும்? எங்கே உங்கள் பழகுனர் உரிமம் தாளை காண்பியுங்கள்" என்றார்.

உடனே சாந்தாசிங், தன் பாக்கெட்டுலுள்ள கவரை உடனே எடுத்து நீட்டி "இதோ அத்தாட்சி! நான் அஞ்சல் வழியில் கார் ஓட்டி பழகுகிறேன்..!" என்றார்


_________________________________

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக...........

சந்தா-சிங் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு சாவுக்கு போராடிக்கொன்டிருந்தார். அவர் கட்டில் அருகில் அவர் குடும்பத்தார்கள் நின்றிருந்தார்கள். அவர் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது. அவர் கூடவே அவர் நண்பர் பன்டா-சிங் நின்றிருந்தார். சந்தா இறக்கும் தருவாயில் ஒரு பேனாவும் கடதாசியும் கேட்டார். கொடுத்தார்கள். எழுதி முடிந்த கையோடு இறத்து விட்டார்.
பன்டா யோசித்தார்.....இது சந்தா இறக்கும் தறுவாயில் எழுதியது. இதில் எதாவது முக்கிய விசயம் இருக்கும். எனவே இது சாகவாசமாக பார்க்கவேண்டிய விடயம் எனவே தனது சட்டைப் பையில் வைத்து விட்டார்.
எல்லா கிரிகைகளும் முடிந்து மூன்றாம் நாள், பன்டா தனது நண்பர் வீட்டிற்கு போனார். பேசிக்கொன்டிருக்கும் போதுதான், சந்தா இறக்கும் போது இந்த சட்டை போட்டிருந்தேன் என்ற ஞாபகம் வந்தது. சந்தா குடும்பத்தார் அனைவரையும் கூப்பிட்டார். "இது ஒரு முக்கிய கடிதம். சந்தா இறக்கும் போது எழுதி என்னிடம் கொடுத்து விட்டு போனது" என்று சொல்லிவிட்டு பிரித்து வாசிக்க ஆரம்பித்து விட்டார். " பன்டா, மடையா, நீ என் ஒ..க்..க்..க்..க் ........................... ohmy.gif " அவரால் மீதி வாசிக்க முடியவில்லை. விழி பிதுங்கியது. எனவே மற்றவர்கள் அதை பறித்து வாசித்தார்கள். அதில் எழுதப்பட்டிருந்தது.
"பன்டா, மடையா, நீ என் ஒக்சிசன் குழாய் மீது நிக்கிறாய், கொஞ்சம் விலகு 48_48.gif

குர்ஜரன் சிங் புதிதாக ஒரு மாருதி-800 கார் வாங்கினார். அதை தனது நண்பனுக்கு காட்ட என ஒரு விடுமுறை நாளில் புறப்பட்டார். அவர் நண்பர் வீடு 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எனவே அங்கு போய் சேர்ந்தவுடன் தனது அம்மாவுக்கு, தான் வந்து சேர்ந்ததை தொலைபேசி மூலம் தெரிவித்தார் emot-dance.gif . நண்பருடன் பொழுதை களித்து விட்டு மாலை தனது வீடுக்கு புரப்பட்டார்.
இரண்டு நாட்களாக தனது மகன் வீடு வராததால் மகனது நண்பன் வீட்டுக்கு அம்மா தொலைபேசி எடுத்தார். அன்று மாலையே அவர் திரும்பி விட்டார் என்பதை அறிந்த அவர் அம்மா மேலும் கவலை அடைந்தார் cry_smile.gif . செய்வதறியாது வீட்டிலேயே புலம்பிக்கொண்டு இருந்தார்.
இரண்டாவது நாள் மாலை, குர்ஜரன் வேகமாக வீட்டிற்குள் வந்தார். அவர் மிகவும் கோபமாக வேறு இருந்தார். தனது செருப்பு, பை, எல்லாவற்றையும் சுழற்றி எறிந்து விட்டு, சத்தமாக கத்தினார் 48_48.gif 48_48.gif .
" என்ன இந்த மாருதி கார் கொம்பனி காரர்கள், கொஞ்சம் கூட மூளை இல்லாதவங்கள். கார் முன் நோக்கி போவதற்கு 5 கியர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பின் நோக்கி (reverse) போவதற்கு மட்டும் ஒரே ஒரு கியர் மட்டும் தான் வைத்திருக்கிரார்கள் பைத்தியகாரர்கள், கழுத்து வேற ஒரே வலி"
என்று ஓ என அழ ஆரம்பித்து விட்டார் cry_smile.gif


இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர்.

அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர்.

அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.

மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு இந்த சர்தார்ஜி,

உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடுகிறது என்றார்


No comments:

Post a Comment