Saturday, March 12, 2011


இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா? இல்ல, இந்த பஸ் டிரைவர்.


  • பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்? ரைட் சொல்லிவிட்டார்.


  • பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும். நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே.


  • பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது? அதனால் உட்கார முடியாது.


  • நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன். அப்புறம்....?
    கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.


  • கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும். அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு.


  • 3 யானை பஸ் ஸாண்டிற்கு வந்தது. பஸ்ஸில் 2 யானை மட்டும் ஏறியது 1 யானை ஏறவில்லை ஏன்? அது வழியனுப்ப வந்தது.


  • பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன் சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க?
    சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க




    பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
    அப்புறம் என்னாச்சி
    பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.
    1. வாழ மரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??

    2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது

    3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

    4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது

    5. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது

    6. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !

    7. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான் வாழ்க்கை
     

    வாழ்க்கை என்பது பனைமரம் போல.ஏறினா நுங்கு ! விழுந்தா சங்கு!!!!!!!.




    பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்.....
    அதனால இனிமேல் கண்ணாடிய பார்க்காதீங்க.




    வகுப்பறை என்பது ரயில் மாதிரி
    முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
    நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (GENERAL) கடைசி இரண்டு தூங்கும் பெஞ்ச் (SLEEPER)



     

    ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் .... பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்.

    Monday, March 7, 2011

    காதலியின் நியதி

    யாரை நீ காதலித்தாயோ...
    அவள் வேறொருவனைக் காதலித்தாள்...
    யாரை நீ காதலிக்கின்றாயோ...
    அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்...
    யாரை நீ காதலிக்கப் போகின்றாயோ...
    அவளும் வேறொருவனையே காதலிப்பாள்...

    உன்னுடைய எதை இழந்தாய்..?
    ஏன் தாடி வளர்க்கின்றாய்...
    யாரை நீ கொண்டு வந்தாய்..?
    அவளை நீ காதலிக்க..
    யாருக்கு உன் காதலை சொன்னாய்...?
    அவள் உன்னைக் காதலிக்க...
    யார் உன்னைக் காதலித்தாள்..?
    நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க...

    காதலை எங்கிருந்து பெற்றாய்...
    அது இங்கேயே பெறப்பட்டது.
    யார் இன்று உன்னுடைய காதலியோ..
    அவள் நாளை
    இன்னொருவனுடையவளாகின்றாள்
    மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையதாகின்றாள்..??

    இதுவே காதலியின் நியதியும்.. காதலின் சாராம்சமும் ஆகும்..!!!




    இதை என்க்கு உணர்த்திய  என் காதலிக்கு நன்றி