Tuesday, February 12, 2013

காதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்


காதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்

விழிகளில் பொய்யையும்
விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு
திண்டாடுகிறது உன் காதல்..
சரி.. சரி.. வெட்கப்படாமல்
என்னை கட்டிக்கொள்


கண்ணைகட்டி விளையாடலாம் என்று
என் கண்களை மறைத்தாய்.
உலகம் மறைந்தது.
உன் காதல் முழுதாய் தெரிந்தது


பார்க்கும் போது பாதியாகவும்
திரும்பிக்கொண்டு முழுதாகவும்
காதலை கொடுக்கும் வித்தையை
நீ எப்போது கற்றாய்?



என் மீது சாய்ந்தபடி
ஏதேதோ நகைச்சுவை உதிர்த்தபடி
நீ சிரிக்கிறாய்.......
நான் சின்னாபின்னமாகிறேன்.


காமம் சுமந்து காதலிப்பவர்கள் மத்தியில்
நான் காதல் மட்டும் சுமந்தபடி
உன்னை காதலிக்கிறேன்.


நீ எங்கும் ஓடிவிட முடியாதபடி
என் காதலால் உன்னை
கட்டிவைத்திருக்கிறேன்.
ஆனால் சிக்கிக்கொண்டு
தவிப்பதென்னவோ நான்தான்.....


காதலர் தினத்திற்கு எல்லோரும்
காதலிப்பவர்களுக்குதான் பரிசுகள் கொடுப்பார்கள்.
ஒரு வித்தியாசமாய்
உன்னையும் என்னையும் இணைத்து
காதலர் தினத்திற்கே
நம்மை பரிசாக கொடுத்துவிடலாமே.


அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்