Saturday, November 13, 2010

ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு மாற்றம்

நியுட்டனின் விதிகள்தான் சரியென இருந்த நிலையை ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு மாற்றம் செய்தது

நியுட்டனின் இயக்க விதிகள் மூன்றாக அறியப்படுகின்றன, விசை,விசையின் அளவு,விசையின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டனவே இவ்விதிகள்.

Every Action has a Reaction என்று நகைச்சுவையாகவும் குறிப்பிடுவதைக் கூடக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்த வகையில் ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசைக்கு எதிர் விசையை அப்பொருள் தரும் என்பது விசையின் தன்மை சார்பான கோட்பாடாகவும், ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசையின் அளவு அதன் வேகத்தையும்,திசையையும் மாற்றியமைக்கும் என்பது விசையின் அளவு குறித்த கோட்பாடாகவும்,புற விசையின் தாக்கத்தைப் பெறாத வரை ஒரு பொருளின் விசையும் இயக்கமும் ஒரே நிலையில் இருக்கும் என்பது விசையின் இயக்க விதியும் தெளிவு படுத்தியது.

எனினும், காலப்போக்கில் நியுட்டனின் கோட்பாடுகள் குறைந்த வேகத்தில் இயங்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடியனவையாகக் காணப்பட்டாலும், ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடானது குறைந்த வேகமாக இருந்தாலும், ஒளியின் வேகத்துடன் இயங்கினாலும், சார்பு நிலையில் இயங்கும் பொருட்களின் வேகம் மற்றும் விசையின் விதிகளை இயற்பியல் நிர்ணயத்தில் துல்லியயமாக வரையறுக்க உதவுவதாகப் பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில், ஒளியின் வேகம் எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் என்பது நிறுவப்படுவதோடு, மிகச்சிறிய துகள்களிலிருந்து பெரும் சக்தியை உருவாக்கவும் அதே போன்று அவற்றை அடைக்கவும் முடியும் என்பதற்கான இயற்பியல் சமன்பாடு உருவாக்கப்பட்டு, அது ஏறத்தாழ இயற்பியலின் தத்துவமாகவே போற்றப்படுகிறது.

இதன் பயனாக ஒளியின் வேகம் குறித்து ஏற்கனவே நிலவிய கருத்துக்கள் மாற்றியமைக்கப்பட்டதோடு பல புதிய விஞ்ஞானக் கருத்துக்களும் பிறக்க ஆரம்பித்தன. இதன் மூலமே காலமும் வெளியும் ஒன்றாகவே இழைந்திருக்கின்றன போன்ற கோட்டுபாடுகள் பிறந்தன.

E = mc2என்பதே ஐன்ஸ்டீனின் மிகப்பிரபலமான சமன்பாடாகும்.

1 comment: