Saturday, November 13, 2010

சந்திரனில் போதிய அளவு குடிநீர் உள்ளது

விஞ்ஞானிகள் தகவல்

நியூயார்க், அக். 23-

கடந்த ஆண்டு சந்திரன் குறித்த ஆய்வை அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானி கள் மேற்கொண்டனர். அப்போது சந்திரனில் மண் மற்றும் மேற்பரப்பில் 5 சதவீதம் அளவுக்கு ஐஸ்கட்டி படிவங்கள் இருப்பதாக கண்டுபிடித்தனர். அதை வைத்து சந்திரனில் போதிய அளவு தண்ணீர் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

சந்திரனின் 1 டன் பாறையில் இருந்து 13 காலன்கள் அளவு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என கண்டறிந்துள்ளனர். அந்த தண்ணீரை சுத்திகரித்தால் குடிநீராக பயன்படுத்த முடியும் என கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து ராக்கெட்டுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்.

இந்த தண்ணீரை வீட்டுக்கும் எடுத்து செல்லலாம். செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சந்திரனில் போதிய அளவு குடிநீர் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment